Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரி 2’ படத்தில் இணைந்த மலையாள நடிகர்

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (17:08 IST)
மலையாள நடிகரான டோவினோ தாமஸ், தனுஷின் ‘மாரி 2’ படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

 
பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘மாரி’. தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். விஜய் யேசுதாஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.
 
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. தனுஷ் ஹீரோவாக நடிக்க, சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். மலையாள நடிகரான டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் இருவரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில், சில நாட்களுக்கு முன்பு வரலட்சுமியின் போர்ஷன் தொடங்கியது. இந்நிலையில், நேற்று முதல் டோவினோ தாமஸின் போர்ஷன் தொடங்கியுள்ளது. ட்விட்டரில் இந்தத் தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments