தமிழ் சினிமாவில் நாயகிகளின் காலம் என்று பார்த்தால் 5 முதல் 10 ஆண்டுகள்தான். அதன் பிறகு அக்கா, அம்மா வேடத்தைக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர்தான் இதற்கு விதிவிலக்காக இருப்பார்கள். அப்படிப்பட்ட நடிகைதான் திரிஷா.
சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து இப்போதும் பரபரப்பான கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் வாய்ப்பில்லாமல் இருந்தாலும் இப்போது பொன்னியின் செல்வன் வெற்றியால் மீண்டும் அவரைத் தேடி வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.
இப்போது லியோ, சிரஞ்சீவியின் அடுத்த படம் என மாஸ் ஹீரோ படங்களில் நடித்து வரும் திரிஷா, மலையாளத்தில் முன்னனி நடிகரான டோவினோ தாமஸ் நடிக்கும் ஐடெண்டிட்டி என்ற படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை அகில் பால் மற்றும் அனோஸ் கான் ஆகியோர் இயக்க உள்ளனர். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மலையாளத்தில் திரிஷாக்கு ஹேய் ஜூட் படத்துக்கு பிறகு இந்த படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு அமைந்துள்ளது.