அஜித் விஸ்வாசம் படத்தை அடுத்து சதுரங்க வேட்டை, தீரன் ஆகிய படங்களின் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் இரண்டு நடிக்க இருக்கிறார். அந்த படம் கடந்த 2016 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் படம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்திலேயே 4 படங்களில் நடித்து விட்டார். இது ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்களுக்கே சலிப்பை ஏற்படுத்திவிட்டது. அதனால் அஜித்- சிவா காம்போ விஸ்வாசம் படத்திற்கு அடுத்து ஒரு இடைவெளி எடுத்துக்கொள்ள போகிறார்களாம்.
இதையடுத்து அஜித் அடுத்த நடிக்க இருக்கும் படம் குறித்த செய்திகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. அஜித் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிக் கபூர் தயாரிப்பில் இந்தி படமான பிங்க் ரீமேக்கில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை இயக்கித் தருமாறு அஜித் இயக்குனர் வினோத்தை கேட்டு இருக்கிறார். ஆனால் வினோத்தோ ரீமேக் படம் இயக்கும் ஆசை இல்லை. நாம் நேரடி படமே பண்ணலாம் என அஜித்திடம் கூறியிருக்கிறார்.
அதைக்கேட்ட அஜித்தோ முதலில் இந்த படத்தை குறுகிய காலத்தில் முடித்து விட்டு அடுத்து உடனடியாக நீங்கள் சொல்லும் கதையைப் படமாக்கலாம் எனக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு மகிழ்ந்த இயக்குனர் வினோத் டபுள் ஓகே சொல்லி இருக்கிறாராம். இந்த படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.