Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேத்துமான் இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோவாகும் ‘உறியடி’ விஜயகுமார்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (16:11 IST)
உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றப்படம் உறியடி. இந்த படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்த விஜய் குமார் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதையடுத்து அவர் இயக்கிய படம்  "உறியடி 2". இதனை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனத்தின் சார்பில் தயாரித்தார். இப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படத்துக்கு வசனம் எழுதினார்.

இதையடுத்து இப்போது விஜயகுமார் அடுத்து சேத்துமான் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. கிராமத்து பின்னணியில் அரசியல் கதையாக இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரே கட்டமாக தொடர்ந்து 60 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேம் சேஞ்சரோடு மோதுகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

யார் வந்தா என்ன?... வணங்கான் படத்தை துணிந்து இறக்கும் இயக்குனர் பாலா?

மீண்டும் மீண்டுமா?... விடுதலை 2 ஷூட்டிங்கைத் தொடங்கும் வெற்றிமாறன்!

சிம்பு & தேசிங் இணையும் படத்தை தயாரிக்கப் போகும் துபாய் தொழிலதிபர்..!

அமரன் சர்ச்சை: முகுந்த் போர் குற்றவாளின்னு நான் சொல்லல.. இயக்குனர் அப்படி காட்டியிருக்கார்! - திருமுருகன் காந்தி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments