சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதம் ஆகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த படத்தில் சூர்யாவுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீரை நடிக்கவைக்க வெற்றிமாறன் ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நிலையில் படம் இப்போதைக்கு தொடங்காது, கைவிடப்பட்டு விட்டது என பல வதந்திகள் பரவிய நிலையில் விடுதலை படம் இந்த ஆண்டு மத்தியில் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
விடுதலை முதல் பாகம் மார்ச் இறுதியிலும், அடுத்த பாகம் ஆகஸ்ட்டிலும் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. அதன் பின்னர் வாடிவாசல் ஷூட் தொடங்கும் என சொல்லப்படுகிறது.