தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் இன்று வெளியான படம் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார். தில்ராஜு தயாரித்துள்ளார். எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா, ராஷ்மிகா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில், மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் வசூலிலும் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வாரிசு படத் தயாரிப்பாளர் தில் ராஜூ, தன் டுவிட்டர் பக்கத்தில், வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்துள்ளது என்று குறிப்பிட்டு, வம்சி, நடிகர் விஜய், தில்ராஜூ ஆகியோர் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.