சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள வாழ் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2017ம் ஆண்டு புதுமுக இயக்குனர் அருண் பிரபு இயத்தில் வெளியான அருவி படம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு இந்த படத்திற்காக பல்வேறு விருதுகளும் வழங்கபட்டது. இதையடுத்து அவரின் இரண்டாவது படமான வாழ் திரைப்படத்தை சிவகார்த்திகேயன், தயாரித்துள்ளார். இந்த படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்துள்ள நிலையில் ரிலீஸுக்காக காத்திருந்த போது கொரோனா வந்து லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.
அதனால் இப்போதைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் இப்போது அந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அதே போல டாக்டர் படமும் ஓடிடி ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.