Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய் சேகர் தலைப்புப் பிரச்சனை… வடிவேலு எடுத்த முடிவு!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (16:23 IST)
நாய் சேகர் படத் தலைப்பு சம்மந்தமாக வடிவேலுவுக்கும் ஏ ஜிஎஸ் நிறுவனத்துக்கும் இடையே போட்டி நடந்தது.

வடிவேலு சிம்புதேவன் காம்போவின் ஹிட் காம்போவான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டனர். படத்தின் போஸ்டர் வெளியாகி சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் வடிவேலுவுக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஒரு கட்டத்தில் படமும் கைவிடப்பட்டது. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சூட்டோடு சூடாக வடிவேலு தன்னுடைய முத்திரைக் கதாபாத்திரமான நாய்சேகர் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். அதன் பின்னர் மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துவிட்டு பின்னர் வரிசையாக காமெடியன் வேடங்களில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நாய்சேகர் பற்றிய எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகமாகியுள்ள நிலையில் ஒரு புதிய பிரச்சனை தொடங்கியுள்ளது. சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ஏஜிஎஸ் நிறுவனம் அந்த பெயரைதான் பதிவு செய்து வைத்திருந்ததாம். ஆனால் இப்போது வடிவேலுவே அந்த தலைப்பில் புதிய படத்தை ஆரம்பிப்பதால் யார் விட்டுக் கொடுக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது வடிவேலுவே விட்டுக்கொடுக்க முடிவு செய்துவிட்டாராம். ஏனென்றால் ஏஜிஎஸ் நிறுவனம் தலைப்பு விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறதாம். இதனால் இப்போது சுராஜ் வேறு பெயரை தேடும் முயற்சியில் இருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி படத்துடன் ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படம்!

ஷங்கர் & ராம்சரண் கூட்டணியின் கேம் சேஞ்சர் ரிலீஸ் எப்போது?... இசையமைப்பாளர் தமன் வெளியிட்ட தகவல்!

சன்னி லியோன் கிட்ட பேச முடியல… அதுக்காகவே இந்தி கத்துக்கணும்- இயக்குனர் பேரரசு

நந்தன் படத்தைப் பார்த்து அழுதேன்… கைதட்டினேன் –நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு!

கையில் துப்பாக்கி.. வாயில் லாலிபாப்! வார்னரின் மாஸ் எண்ட்ரி! - புஷ்பா 2 ஷூட்டிங் சீனா?

அடுத்த கட்டுரையில்
Show comments