Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது தீப்பிடித்த காடு, பறவைகளே பத்திரம்... எச்சரிக்கும் வைரமுத்து!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (16:20 IST)
ஊரடங்கு தளர்வு குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். 
 
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் பேருந்து, ரயில் போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகளில் அரசு பேருந்துகளை குறிப்பிட்ட மாவட்டத்திற்குள் மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் தற்போது மேலும் தளர்வுகளை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 7 முதல் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
ஊரடங்கு தளர்வு குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஊருக்கு வழங்கப்பட்ட ஊரடங்கின் தளர்வில் உயிர்க்கொல்லி நுழைந்து விடக்கூடாது. மீண்டும் இயங்கப்போகும் வாழ்வியல் வெளியில் கடும் கட்டுப்பாட்டைப் பெரிதும் கைக்கொள்வீர் பெருமக்களே. இது தீப்பிடித்த காடு. பறவைகளே பத்திரம் என்று பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments