Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா மனித முயற்சியா? இயற்கை நிகழ்ச்சியா? வைரமுத்து கவிதை

Advertiesment
vairmuthu
, ஞாயிறு, 3 மே 2020 (12:09 IST)
கொரோனா வைரஸ் மிக வேகமாக உலகம் முழுவதும் பரவி வந்தாலும் இன்னொரு பக்கம் இந்த வைரஸ் எவ்வாறு தோன்றியது? இயற்கையாக தோன்றியதா? அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா? என்பது குறித்த ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசிகள் மற்றும் குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் இன்னொரு பக்கம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் 
 
இந்த நிலையில் இது குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் கொரோனா மனித முயற்சியா? அல்லது இயற்கை முயற்சியா? என்று கண்டறியப்படுவதைவிட அதற்கு மருந்து கண்டுபிடிப்பதில் தான் உலக நாடுகள் முக்கியத்துவம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் இதுகுறித்து எழுதிய கவிதை இதோ:
 
கொரோனா நச்சுயிரி
மனித முயற்சியா இயற்கை நிகழ்ச்சியா
என்பதில் கருத்து வேறுபாடுண்டு.
ஆனால், மருந்து கண்டறிதல்
மனித முயற்சிதான் என்பதில் மாறுபாடில்லை.
உலக நாடுகள் முன்னதைவிடப் பின்னதற்கே
முன்னுரிமை தரவேண்டுமென்பது 
பேருலகின்  பெருவிருப்பம்
 
கவியரசு வைரமுத்துவின் இந்த கவிதை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது லெட்டர் சீ மடல் இல்லை கடுதாசின்னு வச்சுப்போமா? கமல்ஹாசனை கலாய்த்த கஸ்தூரி !!