Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எவ்வளவு வேதனை ; கதறி அழும் வைஷ்ணவி : பிக்பாஸ் வீடியோ

Advertiesment
Bigg boss
, வியாழன், 19 ஜூலை 2018 (14:14 IST)
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை தவிர அவ்வபோது விருந்தினர்களும் வந்து போட்டியை விறுவிறுப்பாக முயற்சித்து வருகின்றனர். 

 
முதலில் ஓவியாவில் தொடங்கி அதன் பின்னர் 'கடைக்குட்டி சிங்கம்' படக்குழுவினர், சினேகன் என மாறி மாறி விருந்தினர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குக் அனாதை குழந்தைகள் சிலர் வந்துள்ளனர். தங்கள் சோகக்கதையை பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் அவர்கள் கூறும் நெகிழ்ச்சியான காட்சிகள் இன்றைய  முதல் புரமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளன.
 
குழந்தைகளின் கதையை கேட்டு மும்தாஜ் கண்கலங்குவது போன்றும், என்னோட அம்மா அப்பா சண்டை போட்டு பிரிஞ்சிட்டதால நான்  அனாதை இல்லத்தில் இருப்பதாக ஒரு சிறுவன் கூறும்போது பாலாஜி கண்ணீர் விடும் செண்டிமெண்ட் பிழியும் காட்சியும் அதில் இடம் பெற்றிருந்தது.
 
அதேபோல், தற்போது வெளியிடப்பட்டுள்ள புரோமோவில், குழந்தைகளின் சோக கதையை கேட்டு மனம் உடைந்த வைஷ்ணவி அதுபற்றி மும்தாஜிடமும், ஜனனி ஐயரிடமும் கூறி குமுறி அழும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
 
இதை வைத்து பார்க்கும் போது இன்றைய நிகழ்ச்சியில் பல உணர்ச்சிகரமான காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள் - ஸ்ரீரெட்டி ஆவேசம்