Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்கள் அணியும் "தாலி" பற்றி மோசமாக பதிவிட்ட வைஷ்ணவி!

Advertiesment
Vaishnavi
, வெள்ளி, 21 ஜூன் 2019 (14:25 IST)
கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த மக்களாலும் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு அடுத்த இடத்தில் படு டேமேஜ் செய்யப்பட்டவர் வைஷ்ணவி. இவர் ஒரு ரேடியோ தொகுப்பாளராக வேலை செய்து பின்னர் ஒரு பத்திரிக்கையாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 


 
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர் சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டு மக்களால் விமர்சிக்கப்பட்டார். பிக்பாஸில் வருவதற்கு முன்னரே வைஷ்ணவி விமானியாக இருக்கும் அஞ்சன் என்பவரை காதலித்து வந்தார். 
 
ஆஸ்திரேலியாவில் வேலை செய்யும் அஞ்சனும், வைஷ்ணவியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததோடு லிவிங் டுகேதார் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் வைஷ்ணவி தனது நீண்ட வருட காதலரான அஞ்சானை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று திருமணம் செய்து கொண்டனர். 
 
இந்நிலையில் இவர் பதிவிட்டுள்ள ஒரு போஸ்டில்,  தாலி கட்டிக் கொள்ளவில்லை, மோதிரங்களை பரிமாறிக் கொள்ளவில்லை. நாங்கள் தங்கமோ, வைரமோ வேறு எந்த நகைகளையோ வாங்கவில்லை. நான் கவரிங் நகைகளை மட்டும் தான் அணிந்திருந்தேன் என்று கூறியிருந்தார். 

Vaishnavi

 
இந்தப் பதிவை கண்ட விட்டர் வாசி ஒருவர் தாலி என்பது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் நமது முன்னோர்கள் அதனை உடல் நலத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் உருவாக்கிய அதனை அது அது ஒன்றும் பந்தாவுக்காக காட்டிக்கொள்ளும் ஒரு ஆபரணம் கிடையாது’ என்று பதிவிட்டிருந்தார். 

Vaishnavi

 
இதற்கு ரிப்ளை செய்த வைஷ்ணவி தாலி அணிவது எந்த விதத்தில் ஆரோக்கியம் அளிக்கிறது என கேள்வி எழுப்பியதோடு, இப்போதெல்லாம் இது பாதுகாப்பற்றது, மேலும் சங்கிலி ஸ்னாட்சுகள் காரணமாக தங்க தாலி அணிவது மிகவும் பாதுகாப்பற்றது என கூறினார். 
 
வைஷ்ணவி தாலி குறித்து இப்படி பேசியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் வைஷ்ணவி பல விமர்சங்களை பெற்று வருகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"திருவள்ளுவர் எழுத்தாளர் அவ்ளோவ் தான், ஆனால் தளபதி ஆல் ன் ஆல்" ரசிகர்களின் அலப்பறை!