Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலிமை ரிலீஸ் தேதி இதுதான்… பேன் இந்தியா படத்தோடு மோதல்!

வலிமை ரிலீஸ் தேதி இதுதான்… பேன் இந்தியா படத்தோடு மோதல்!
, புதன், 26 ஜனவரி 2022 (16:03 IST)
வலிமை படத்தின் ரிலிஸ் மார்ச் மாதத்தில் ரிலிஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருந்த வலிமை திரைப்படம் கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலைமை சரியானதும் படத்தை மூன்று மொழிகளில் வெளியிட படக்குழு தயாராக உள்ளது.

இந்நிலையில் வலிமை எப்போது ரிலிஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. இதுபற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்காக காத்திருக்கப் போவதில்லையாம். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இரவுக் காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டதும் ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுவரை படக்குழு மார்ச் மாதம் 18 ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் படக்குழு உள்ளதாம். ஆனால் அதே நாளில்தான் ஆர் ஆர் ஆர் படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதற்கும் துணிந்தவன் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு தேதி இதுதான்!