Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘வனமகன்’ தள்ளிப்போனது ஏன்?

Webdunia
புதன், 10 மே 2017 (15:07 IST)
விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘வனமகன்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
 
 
விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா நடித்துள்ள படம் ‘வனமகன்’. டார்ஜானைப் போல, காட்டுக்குள்ளேயே பிறந்து வளர்ந்தவராக நடித்துள்ளார் ஜெயம் ரவி. காட்டில் பிறந்தவர் என்பதால், அவருக்குப் பேசவராது. படம் மூலம் சைகை மற்றும் சப்தங்கள் மூலமாகவே பேசி நடித்துள்ளார். இது, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படம்.
 
இந்தப் படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், ‘பாகுபலி 2’ படத்தின் பிரமாண்ட வெற்றியால்,  போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எனவே, மே மாதம் 19ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் ரிலீஸை, அடுத்த மாதம் (ஜூன்) 23ஆம்  தேதி தள்ளி வைத்துள்ளனர். இதற்கு  காரணம், விஷால் எனத் தெரியவந்துள்ளது.
 
திரைத்துறைக்காக மத்திய, மாநில அரசுகளிடம் சில கோரிக்கைகளை தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் வைத்துள்ள  விஷால், அவை நிறைவேற்றப்படாவிட்டால் மே 30 முதல் அனைத்து சங்கங்களும் காலவரையரையற்ற போராட்டத்தில் ஈடுபடும் என அறிவித்தார். அப்படி போராட்டம் நடந்தால், தியேட்டர்களும் மூடப்படும். எனவே, 19ஆம் தேதி ரிலீஸாகும் படம்,  11 நாட்கள் மட்டுமே ஓடும். இது படத்தின் கலெக்‌ஷனைப் பாதிக்கும் என்பதால், படத்தின் ரிலீஸைத் தள்ளி வைத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments