Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாரிசு படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றிய பாலிவுட் ஆடியோ நிறுவனம்!

வாரிசு படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றிய பாலிவுட் ஆடியோ நிறுவனம்!
, சனி, 22 அக்டோபர் 2022 (14:53 IST)
வாரிசு திரைப்படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த மாதத்துக்குள் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஐரோப்பா முழுமைக்குமான ரிலீஸ் உரிமத்தை சீசன்ஸ் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் கைப்பற்றியுள்ளது.  இதை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிர்யேஷன்ஸ் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை பாலிவுட்டின் பிரபல ஆடியோ வெளியீட்டு நிறுவனமான டி சீரிஸ் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல ஓடிடியில் தனுஷின் நானே வருவேன்… தேதி இதுதான்!