வாரிசு படம் ரிலீஸாக இன்னும் 10 நாட்களுக்குள் இருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் இன்னும் வெளியாகவில்லை.
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவை காண விஜய் ரசிகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட 5000 ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் விழாவைக் கண்டு களித்தனர்.
படத்தின் ரிலீஸுக்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஜனவரி 4 ஆம் தேதி புதன் கிழமைதான் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் நேற்று வாரிசு படத்தின் சென்சார் நடைபெற்றதாக சொல்லப்பட்டது.
இதற்கிடையில் வாரிசு டிரைலர் தாமதத்துக்கு ஒரு வகையில் சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் டிரைலரும் காரணம் என சொல்லப்படுகிறது. துணிவு படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் வாரிசு டிரைலர் இருக்க வேண்டும் என்பதற்காக இப்போது அதில் திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.