விமல் நடிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள வெப் சீரிஸான விலங்கு ஜி 5 தளத்தில் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த விமல், தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலை உருவானது.
இந்நிலையில் அவர் நடித்துள்ள விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை புரூஸ் லி படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் விமல் பேசியது சமூகவலைதளத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.
அதில் எனக்குப் படம் இல்லை. நான் மூனு வருஷமா வீட்டில் இருக்கிறென்.நான் கதாநாயகன். அண்ணன் (எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்) கொடிகட்டு பறந்தார் அவரு ஆபிஸ்ல உக்காந்துருக்காரு. பிரசாந்த் (இயக்குனர்) ஒரு ப்ளாப் படம் கொடுத்தான் அவனுக்கும் படம் இல்லை. எப்படி இருக்கும் பாருங்க, எங்கள நம்பி வாய்ப்புக் கொடுத்த ஜி 5 யையதான் பாராட்டணும். இத வந்து மூனு தோத்தவங்கனு பாக்குறதா இல்ல மூனு அனுபவசாலிங்கன்னு பாக்குறதா? எனப் பேசியுள்ளார். விமலின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.