Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெந்து தணிந்தது காடு ஷூட்டிங்… மீண்டும் மும்பைக்கு செல்லும் படக்குழு!

வெந்து தணிந்தது காடு ஷூட்டிங்… மீண்டும் மும்பைக்கு செல்லும் படக்குழு!
, செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (15:38 IST)
வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக நடந்துவருகிறது.

நடிகர் சிம்பு தனது திரையுலக வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸில் இருக்கிறார். இதையடுத்து அவர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இப்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்டமாக மும்பையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்தது. ஆனால் இப்போது விடுபட்ட சில காட்சிகளை மீண்டும் எடுக்க படக்குழு மும்பைக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஸ்வர்யா ராஜேஷின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா?