மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து அவர் விடுதலை இரண்டாம் பாகத்தின் வேலைகளை துவங்கிவிட்டார். இந்த படத்துக்கு பிறகு வாடிவாசல் படத்தை தொடங்க வுள்ளார்.
அந்த படத்தையும் முடித்த பின்னர் ஜூனியர் என் டி ஆர் மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தை விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.