விடுதலை திரைப்படத்தை ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட விடுதலை இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர்.
ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்தது. சமீபத்தில் கடைசி கட்ட ஷூட்டிங் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதிகளில் நடந்தது. அதோடு மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வெற்றிமாறன் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இந்த அதிகாரப்பூர்வமற்ற தகவலை இப்போது படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
இதனால் படத்தின் பட்ஜெட் எக்கச்சக்கமாக எகிறிவிட்ட நிலையில் இதனால் போட்ட பணத்தை எடுக்க முடியுமா என்ற சந்தேகத்தில் இருந்த தயாரிப்பாளருக்கு , ஒருவேளை படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் மீண்டும் ஒரு படம் இயக்கி தருகிறேன் என்று உறுதியளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.