Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 6 June 2025
webdunia

வாடிவாசல் படத்தில் அமீரின் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம்… வெற்றிமாறன் எடுத்த முடிவு!

Advertiesment
சூர்யா
, புதன், 29 நவம்பர் 2023 (07:39 IST)
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில்  அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது.

இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது வாடிவாசல் சம்மந்தமாக இயக்குனர் வெற்றிமாறன் இப்போது அமீரை சந்தித்து பேசியுள்ளார். வாடிவாசல் படத்தின் திரைக்கதை எழுதும் போது அமீரின் கதாபாத்திரம் மேலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளதாக வெற்றிமாறன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் சந்தித்து உரையாடும் புகைப்படம் இப்போது வைரல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 68 படத்தில் இணைந்த லவ் டுடே புகழ் இவானா!