இயக்குனர் வெற்றிமாறன் மறைந்த தமிழ்க் கவிஞர் பிரமிள் பற்றிய ஆவணப்படத்தைத் தயாரிக்கிறார்.
தமிழ்க் கவிஞர்களில் முக்கியமானவராகவும் எழுத்தாளராகவும் இலக்கிய உலகில் கருதப்படுபவர் பிரமிள். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அவர் தமிழகத்துக்கு 1960 களில் புலம்பெயர்ந்தார். தொடர்ந்து கவிதை, கட்டுரை என்று பல தளங்களில் இயங்கியவர். அதுமட்டுமில்லாமல் சிறபக் கலையிலும் ஆர்வத்தோடு செயல்பட்டவர். கடந்த 1997 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பால் வேலூரில் உள்ள கரடிக்குடி என்னும் ஊரில் இயற்கை எய்தினார்.
தற்போது அவர் பற்றிய ஆவணப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரான தங்கம் இந்த ஆவணப்படத்தை தயாரிக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் வேலூரில் அமைந்துள்ள பிரமிளின் நினைவிடத்தைப் புதுப்பித்து மணிமண்டபமாக கட்டும் பொறுப்பையும் வெற்றிமாறன் ஏற்றுள்ளார்.