Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வருஷம் 2040… உலகம் எங்கயோ போயிடுச்சு… இன்னும் இவன் இத நம்பிட்டு இருக்கான்.. எப்படி இருக்கு LIK டீசர்?

Advertiesment
லவ் டுடே

vinoth

, புதன், 27 ஆகஸ்ட் 2025 (14:35 IST)
தற்போது ப்ரதீப் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்ற படத்திலும் அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ‘ட்யூட்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே இறுதிகட்டத்தில் உள்ளன. இந்நிலையில் LIK திரைப்படத்தின் ரிலீஸ் தற்போது மாற்றப்பட்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LIK படத்தில் ப்ரதீப்புடன் எஸ் ஜே சூர்யா, க்ரீத்தி ஷெட்டி மற்றும் சீமான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ரவி வர்மன் மற்றும் சத்யன் சூர்யன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது LIK படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. 2040 ஆம் ஆண்டில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ளது. 2040 என்பதால் சென்னை நகரத்தின் வளர்ச்சியைக் காட்டும் விதமாக விஷ்வல்களை உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர். சென்னையின் அடையார் சாலை, ராஜீவ் காந்தி மருத்துவமனை என்று விஷ்வல்களில் வெரைட்டி காட்டினாலும், டீசர் ரசிகர்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் எதையும் காட்டவில்லை என்பது ஏமாற்றமே. 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதராஸி படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வருவார்கள்… KPY பாலா நம்பிக்கை!