அஜித் 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இது தவிர படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சக தொழில்நுட்பக் கலைஞர்கள் என யாரும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது படத்தின் கதையில் லைகா நிறுவனத்துக்கு திருப்தி இல்லாததால் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு வேறு இயக்குனரை தேடுவதாக நேற்று முழுவதும் சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவின.
இந்நிலையில் இன்று அந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என பல ஊடகங்களும், பத்திரிக்கையாளர்களும் செய்தி வெளியிட்டுள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் அஜித் மற்றும் லைகா ஆகிய இருவருக்குமே விக்னேஷ் சிவன் சொன்ன கதை சுத்தமாக பிடிக்காததுதானாம். பட அறிவிப்பு வெளியிட்டு 8 மாதங்கள் ஆகியும் திரைக்கதை வேலையில் ஈடுபடாமல் விக்னேஷ் சிவன் ஜாலியாக சுற்றியதால் லைகா நிறுவனம் உச்சபட்ச கோபத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.