Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் 62 படத்துக்காக ஒரு பாடலை இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்

Webdunia
வெள்ளி, 12 ஜனவரி 2018 (18:04 IST)
விஜய் 62 படத்துக்காக, ஒரு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து முடித்துவிட்டதாகத் தகவல்  கிடைத்துள்ளது.
‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘விஜய் 62’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, மலையாளப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரீஷ்  கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
 
ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, சந்தானம் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். ‘மெர்சல்’ படத்தைத்  தொடர்ந்து இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ள நிலையில், ஒரு பாடலுக்கு இசையமைத்து முடித்துவிட்டாராம்  ஏ.ஆர்.ரஹ்மான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments