விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் விஜய் லியோ படத்தின் ஷுட்டிங்கை இன்றோடு முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கே இன்னும் தொடங்காத நிலையில் படத்தின் ஆடியோ உரிமை சுமார் 24 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை விஜய் படத்துக்கு ஆடியோ உரிமம் இவ்வளவு பெரிய தொகை விலைபோனதில்லை என சொல்லப்படுகிறது.