Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முழுக்க முழுக்க வெளிநாட்டில் நடக்கும் விதமாக உருவாகிறதா விஜய் 68?

முழுக்க முழுக்க வெளிநாட்டில் நடக்கும் விதமாக உருவாகிறதா விஜய் 68?
, வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (14:16 IST)
விஜய்  லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் படத்தில் விஜய்யின் தோற்றத்தை 3டி விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில் ஸ்கேன் செய்ய விஜய், படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய மூவரும் அமெரிக்கா சென்றனர்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் இங்கிலாந்தின் லண்டனில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குற்றப் பரம்பரை வெப் சீரிஸில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்!