Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 5 June 2025
webdunia

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

Advertiesment
Vijay

vinoth

, ஞாயிறு, 16 ஜூன் 2024 (07:40 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்க இயக்குனர் ஹெச் வினோத்  ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த படம் அக்டோபரில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இன்னும் ஒரு மாதம் தள்ளி நவம்பரில்தான் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதே போல விஜய்யின் கோட் திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாவதில் தொழில்நுட்பப் பிரச்ச்னைகள் காரணமாக சிறு தாமதம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!