விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி கட்டுவதில் இருந்து சலுகை அளிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் மேலும் அவருக்கு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் நீதிமன்றம் அபராதம் விதித்தது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் விஜய்யை பிடிக்காதவர்கள் சொகுசு கார் வாங்கிய விஜய்யால் வரி கூட கட்ட முடியவில்லையே என்ற ரீதியில் டுவிட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் விஜய் ரோல்ஸ்ராய்ஸ் காரை கடந்த 2012ஆம் ஆண்டு வாங்கும்போதே முழு வரியையும் கட்டி விட்டார்.
அதன் பின்னர் அந்த வரியில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு தான் அவர் மனு தாக்கல் செய்தார் என்பதும் இதற்கு முன் ஏற்கனவே பலர் இதே போன்று மனு தாக்கல் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆனால் விஜய் தான் வாங்கிய காருக்கு வரியே கட்டவில்லை என்ற ரீதியில் ட்வீட்டுகள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் ரசிகர்களுக்கு இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் காருக்கு வரி கட்டிய ரசீதை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது