விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் அடுத்து ஒரு படத்தில் இணையப் போவதாக சொல்லப்படுகிறது.
மாஸ்டர் படத்துக்குப் பின்னர் இப்போது லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வேலைகளில் பிஸியாக உள்ளார். விஜய்யும் நெல்சன் இயக்கும் படத்துக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது உதவியாளர் குழு ஒன்றை தனியாக அமர்த்தி தனது ஒன்லைனை சொல்லி அதை டெவலப் செய்ய சொல்லி அனுப்பியுள்ளாராம். மீதமுள்ள உதவி இயக்குனர்கள் குழுவோடு சேர்ந்து அவர் விக்ரம் படத்தின் வேலைகளை செய்து வருகிறாராம்.
மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில சமரசங்களை செய்து கொண்டிருந்தார் லோகேஷ். ஆனால் இந்த முறை உன்னுடைய ஸ்டைலில் ஒரு படம் பண்ணலாம் என விஜய் லோகேஷிடம் கூறியுள்ளாராம்.