பிச்சைக்காரர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் 2016ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த படம் பிச்சைக்காரன். இதையடுத்து, விஜய் ஆண்டனி தயாரித்து, இயக்கி நடித்து, இசையமைத்திருந்த “பிச்சைக்காரன் 2” படம் கடந்த 19 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.
இப்படம் வெளியாகி நல்ல ஓபனிங் கொடுத்த நிலையில், தன் நடிப்பு கேரியலில் இது பெரிய ஓபனிங் என்று விஜய் ஆண்டனி பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் இந்த படம் 3 நாட்களில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது..
இதனால், இப்படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்குப் பதிலளித்த விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 3 ஆம் பாகம் எடுக்கப்படுவது உறுதி; அந்த படம் 2025 ஆம் ஆண்டுதான் தொடங்கப்படும் என்று ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு செருப்பு, போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பொருட்களை அடங்கிய ஆண்டி பிகிலி கிட்டை வழங்கினார்.
இதுகுறித்த புகைப்படங்கள் இணையதங்களில் வைரலாகி வருகிறது.