Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மழை பிடிக்காத மனிதன்’ டீசர்..! இந்த படமாவது விஜய் ஆண்டனிக்கு கைகொடுக்குமா?

Siva
புதன், 29 மே 2024 (20:15 IST)
விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் ஆகி வைரல் ஆகி வருகிறது. 
 
விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய மழை படிக்காத மனிதன் என்ற படத்தை விஜய் மில்டன் இயக்கி உள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று வெளியாகி உள்ள டீசர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த டீசரில் விஜய் ஆண்டனி ஆக்சன் காட்சிகள் அதிரடி காட்சிகள் இருக்கும் நிலையில் இந்த படமாவது விஜய் ஆண்டனிக்கு கை கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 
 
விஜய் ஆண்டனி நடித்த சில படங்கள் வரிசையாக தோல்வியடைந்த நிலையில் இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அச்சு ராஜா ணி மற்றும் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளனர்.  விஜய் மில்டன் ஒளிப்பதிவில், பிரவீன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது.  
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments