Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிச்சைக்காரன் 2 படத்தைக் கைப்பற்றியதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

பிச்சைக்காரன் 2 படத்தைக் கைப்பற்றியதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்?
, வியாழன், 9 மார்ச் 2023 (15:59 IST)
விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுமை பெற்றது. இதையடுத்து படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் செய்தியை விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். பிச்சைக்காரன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார். தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நாளில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் பிச்சைக்காரன் படத்தை பிரபல விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தொடர்ச்சியாக பிரபல நடிகர்களின் படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தகக்து.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பால்கனில நின்னு ஸ்டன்னிங் போட்டோஷூட்டை நடத்திய ராஷி கண்ணா!