Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணீர் சிந்தி விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (06:45 IST)
உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  இரு தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சு திணறல பிரச்சனை இருப்பதால் வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 71. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

விஜயகாந்தின் மறைவையொட்டி இன்று ஒருநாள் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று காலை அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் பார்வைக்காக எடுத்து செல்லப்பட்டது.

இந்நிலையில் விஜயகாந்தின் குடும்ப நண்பரும் சக நடிகருமான விஜய் அழுதபடியே வந்து விஜயகாந்தின் உடலுக்கு இரங்கல் தெரிவித்தார்.  விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் விஜய். விஜய் ஆரம்பகாலத்தில் திரையுலக பயணத்தில் தடுமாறிக் கொண்டிருந்த போது செந்தூரப்பாண்டி படத்தில் அவரோடு இணைந்து நடித்து அவருக்கு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் விஜயகாந்த் என்பவர் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments