Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் GOAT பட முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

விஜய்யின் GOAT பட முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

vinoth

, செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (07:22 IST)
விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பலகட்டமாக நடந்து வரும் நிலையில் தற்போது சென்னை தாம்பரத்தில் நடந்து வருகிறது. இறுதிகட்ட ஷூட்டிங் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்காக விஜய் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது… லேட்டஸ்ட் தகவல்!