Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட இந்திய மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத விஜய்யின் ‘கோட்’ திரைப்படம்… என்ன காரணம்?

vinoth
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (08:46 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

நேற்று முதல் காட்சி ரிலீஸ் ஆனதில் இருந்து படம் கலவையான விமர்சனங்களதான் பெற்று வருகிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் நேற்று படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது.

ஆனால் வட இந்தியாவில் இந்த படம் மல்டிப்ளக்ஸ் திரைகளில் வெளியாகவில்லை. வட இந்திய மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் ஒரு படத்தை வெளியிட வேண்டுமானால் தியேட்டர் ரிலீஸுக்குப் பின்னர் 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும். ஆனால் கோட் திரைப்படம்  ஏற்கனவே நெட்பிளிக்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்டு விட்டதால் நான்கு வாரத்திலேயே ரிலீஸாகும். அதனால் இந்தி பெல்ட் மல்ட்டிப்ளக்ஸ்களில் கோட் திரைப்படம் வெளியாகவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

100 கோடி ரூபாய் வசூலை நெருங்கிய துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’!

காக்க காக்க படத்தில் என்னை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கினார் ஜோதிகா- சூர்யா பகிர்ந்த தகவல்!

எதிர்கொள்வோம்.. எதிரி கொல்வோம்.. சூர்யாவின் ‘கங்குவா’ டிரைலர்..!

டெல்லி கணேஷ் மறைவு: முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை, விஜய் இரங்கல்..!

டீசர்லாம் மாஸ்தான்.. ஆனா கதை? தப்பிப்பாரா சங்கர்? - கேம் சேஞ்சர் டீசர் ரியாக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments