Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலகிய சன் டிவி... கோட் படத்தின் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

vinoth
சனி, 11 மே 2024 (07:42 IST)
அரசியல் வருகையை அறிவித்துள்ள விஜய் தற்போது  GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக ரஷ்யாவுக்கு சென்று வந்தது படக்குழு.  இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியது. அதே போல தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் அந்த முடிவில் இருந்து சன் தொலைக்காட்சி நிறுவனம் பின் வாங்கியது. தயாரிப்பாளருக்கும் சன் தொலைக்காட்சிக்கும் பேரம் படியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது கோட் படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். படத்தின் சேட்டிலைட் மற்றும் இந்தி டப்பிங் உரிமைக்கான தொகை சுமார் 90 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடைசியாக ஜி தொலைக்காட்சி விஜய்யின் மெர்சல் பட உரிமையைக் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’… பின்னணி என்ன?

கேம் சேஞ்சரோடு மோதுகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

அடுத்த கட்டுரையில்
Show comments