Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் அடுத்த பட ஒளிப்பதிவாளர் இவர்தான்… எப்போது ஷூட்டிங்?

vinoth
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (14:40 IST)
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  உருவான கோட் திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படம் முதல் நாளில் உலகளவில் 126 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது.

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்க இயக்குனர் ஹெச் வினோத்  ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது குறித்தோ தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஆனால் அக்டோபர் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே விஜய்யோடு மாஸ்டர் படத்திலும், ஹெச் வினோத்தோடு தீரன் படத்திலும் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோட் படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் எப்போது?... வெளியான தகவல்!

இன்று ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ்… ரசிகர்கள் ஆதரவு எந்த படத்துக்கு?

விடாமுயற்சி படத்துடன் ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படம்!

ஷங்கர் & ராம்சரண் கூட்டணியின் கேம் சேஞ்சர் ரிலீஸ் எப்போது?... இசையமைப்பாளர் தமன் வெளியிட்ட தகவல்!

சன்னி லியோன் கிட்ட பேச முடியல… அதுக்காகவே இந்தி கத்துக்கணும்- இயக்குனர் பேரரசு

அடுத்த கட்டுரையில்
Show comments