Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரி vs விஜய் சேதுபதி – சத்தியமங்கலத்தில் பிஸியாக நடக்கும் ஷூட்டிங்!

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (16:20 IST)
விஜய் சேதுபதி வெற்றிமாறன் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக சத்தியமங்கலம் காடுகளுக்கு சென்றுள்ளாராம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சத்திய மங்கலம் காடுகளில் நடக்க உள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க பாரதிராஜா முன்பு ஒப்பந்தம் ஆனார். ஆனால் படப்பிடிப்பு நடக்க உள்ள டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சமவெளிப்பகுதியிலேயே குளிர் அதிகமாக இருக்கும். இந்நிலையில் காடுகளில் முழுப் படப்பிடிப்பும் நடக்க உள்ளதால் பாரதிராஜாவால் வயோதிகத்தின் காரணமாக குளிரை தாங்க முடியாத சூழல் உருவாகவே அப்படத்தில் அவர் விலகினாராம்.

இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கதாநாயகனாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தன் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்கும் சூரிக்கு வில்லனாக நடிக்க சம்மதித்து இருப்பது வெற்றிமாறனுக்காகவும், அந்த கதைக்காகவும்தான் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி சத்தியமங்கலம் சென்றுள்ளாராம். அங்கு அவரும் சூரியும் நடிக்கும் காட்சிகளை இப்போது வெற்றிமாறன் படம்பிடித்து வருகிறாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments