Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின் 50 ஆவது பட ரிலீஸ் எப்போது?

vinoth
புதன், 17 ஜனவரி 2024 (07:55 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் இயக்கும் மகாராஜா ஷூட்டிங் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா இயக்கி வருகிறார். இது விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகி வருகிறது.

தொடர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்து வருகின்றன. சமீபத்தில் பொங்கலை முன்னிட்டு அவர் நடித்திருந்த இந்தி படமான மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது.

ஆனால் தமிழில் பெரிய வெற்றியை அந்த படத்தால் எட்ட முடியவில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ரிலீஸை பிப்ரவரி மாதத்தில் வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments