Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை இயக்கவுள்ள ராம்கோபால் வர்மா?

vinoth
வெள்ளி, 28 ஜூன் 2024 (10:40 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது மகாராஜா. அவர் கதாநாயகனாக நடித்தால் இனிமேல் படமே ஓடாது என்கிற பேச்சுகளுக்கு எல்லாம் பதில் சொல்லும் விதமாக மகாராஜா பேய் ஹிட் ஆகியுள்ளது.

இதையடுத்து இனிமேல் வில்லன் மற்றும் கௌரவ வேடங்களில் நான் நடிக்கப் போவதில்லை என அவர் ஓப்பனாக அறிவித்துள்ளார். அடுத்து கதாநாயகனாக மட்டுமே படங்களில் நடிக்கும் முடிவில் இருக்கும் அவர் அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் அடுத்து அவர் நடிக்கவுள்ள படத்தை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments