Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதவி இயக்குனர்களுக்கு விஜய் சேதுபதி சொன்ன சூப்பர் அறிவுரை!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (12:44 IST)
இயக்குநர் பா.இரஞ்சித்தின் "கூகை திரைப்பட இயக்கம்" , உதவி இயக்குநர்கள், "96" படக்குழுவினருடன் கலந்துரையாடும்  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி கூகை நூலகத்தில் நேற்று நடந்தது.
 
இதில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் வசந்தபாலன் எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், தமிழ் பிரபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்நிகழ்வில்  நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், "இங்கு கூடியுள்ள உதவி இயக்குனர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். ஒருவரிடத்தில் நீங்கள் கதை சொல்வது மிகவும் முக்கியம். கேட்பவருக்கு புரியும் படியாக நீங்கள் கதை சொல்ல வேண்டும்.
 
'96' திரைப்படத்திற்குள் நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த குழுவும் வருவதற்குக் காரணம் இயக்குநர் பிரேம் எங்களிடம் கதை சொன்ன விதம் தான். அதே போல நமக்கு ஒரு விசயம் கிடைக்காமல் போனால், அடுத்தவர் மீது பழிபோடக்கூடாது.
 
நாம் நினைத்ததை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடிக்கும் போது, மணி சாரிடம் இந்த பண்பை நான் பார்த்து அசந்து போனேன்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments