Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் டப்பிங் பேசியதற்காக விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் டப்பிங் பேசியதற்காக விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
, திங்கள், 17 ஜூலை 2023 (09:11 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில்  உருவாகியுள்ளள மாவீரன் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. முதல் நாளில் தமிழகத்தில் 6.5 கோடி ரூபாய் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்துக்கு அசரீரி போல ஒரு குரல் கேட்டு, அவரை தூண்டும் விதமாக அமைக்கபட்டுள்ளது. அந்த குரலால்தான் பயந்தவரான அவர் மாவீரனாக மாற்றுகிறது. அப்படிப்பட்ட அந்த குரலுக்கு டப்பிங் பேசியுள்ளார் விஜய் சேதுபதி. படத்தின் வெற்றிக்கு விஜய் சேதுபதியின் குரலும் ஒரு சிறு காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தில் டப்பிங் பேசியதற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மடோன் அஸ்வினின் நட்புக்காக சம்பளம் எதுவும் வாங்காமல் விஜய் சேதுபதி மாவீரன் படத்துக்கு டப்பிங் பேசிக் கொடுத்துள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலையாளத்தில் மட்டும் பெயர் மாற்றப்படுமா ரஜினியின் ஜெயிலர்?