Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முரளிதரன் படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்தாரா மக்கள் செல்வன்! ஆனால் ஒரு சிக்கல்!!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (11:04 IST)
நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் பயோ பிக்கில் நடிக்க உள்ள படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் விஜய் சேதுபதி தரப்பிலிருந்து இந்த படத்தை பார்த்த பிறகு தங்களுடைய கருத்தை கூறுங்கள் என்று தெரிவித்ததாக தெரிகிறது.

ஆனாலும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் இந்த படத்தில் நடிக்க கூடாது என விஜய் சேதுபதிக்கு தொலைபேசி வாயிலாகவும், நேரில் சென்றும் அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்போது அந்த படத்தில் இருந்து விலகி விடலாமா என யோசித்து வருகிறாராம் விஜய் சேதுபதி. ஆனால் அந்த படத்துக்காக ஒரு பெரும் தொகையை அட்வான்ஸாக பெற்று அதை வேறு படங்களில் முதலீடு செய்து விட்டதால் அட்வான்ஸை திருப்பிக் கொடுக்க என்ன செய்வது என யோசிக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments