Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரி ரிலீஸ் கோதாவில் களமிறங்கும் விஜய் சேதுபதி… அடுத்தடுத்து தயாராகும் இரண்டு படங்கள்!

vinoth
ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (14:55 IST)
சமீபகாலமாக பழைய படங்களின் ரி ரிலீஸ் அதிகளவில் நடந்து வருகிறது. புதுப்படங்களின் வரவேற்புக் குறைவாக உள்ள நிலையில் சென்னையின் பிரபல திரையரங்குகள் இதுபோல பழைய படங்களை ரி ரிலீஸ் செய்கின்றனர். புது படங்கள் ஓடாததுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ரசிகர்கள் பழைய படங்களுக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர் என்பதே அதிக படங்கள் ரி ரிலீஸ் ஆகக் காரணம்.

சமீபத்தில் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன், அஜித்தின் வாலி  ஆகிய திரைப்படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றன. இவற்றில் உச்சமாக விஜய்யின் கில்லி திரைப்படம் ரி ரிலீஸில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

இந்நிலையில் இப்போது இந்த ரி ரிலீஸ் வைபவத்தில் விஜய் சேதுபதியும் இறங்குகிறார். அவரின் நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் மற்றும் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய இரு திரைப்படங்களும் விரைவில் ரி ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த இரு படங்களுமே விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் கொடுத்தன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments