உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சு திணறல பிரச்சனை இருப்பதால் வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 71. அவருக்கு சக திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத் தலைவராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ள விஜயகாந்தின் மறைவையொட்டி நாளை ஒருநாள் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்ய விரும்புவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு அரசு மரியாதையுடன் நாளை மாலை 4.45 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது.