Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்துகொள்வாரா?

கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்துகொள்வாரா?
, திங்கள், 11 ஜூலை 2022 (14:44 IST)
விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் நடைபெற உள்ளது.

இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக கோப்ரா உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதுபோல படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ‘யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக தொலைக்காட்சி உரிமையைக் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம், அதன் காரணமாக பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் இன்று நடக்கும் கோப்ரா இசை வெளியீட்டில் அவர் கலந்துகொள்வார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சூர்யா 41’ படத்தின் டைட்டில் இதுவா? இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு!