Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் வசூல் மழை பொழியும் விக்ரம்… விநியோகஸ்தர் வெளியிட்ட பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (09:48 IST)
கமல் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனின் திரைவாழ்வில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது. இதுவரை கமல் படத்துக்குக் கிடைக்காத வரவேற்பு இந்த படத்துக்கு கிடைத்தது. முதல்நாளில் உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் முதல் வாரக் கடைசியை கடந்துள்ள நிலையில் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்திலும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் வார இறுதியில் முதல் 5 படங்களுக்கு விக்ரம் திரைப்படம் இடம்பிடித்துள்ளது. இது சம்மந்தமான பட விநியோக நிறுவனமான ப்ரைம் மீடியா பிலிம்ஸ் இதுவரை விக்ரம் திரைப்படம் 15 லட்சம் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 12 கோடி ரூபாய்க்கு மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments