கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடக்க உள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று வந்தது என்பதும் கமல்ஹாசனுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இப்போது மீண்டும் தொடங்கி மும்பை தாராவியில் நடந்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கி நடக்க உள்ளதாம். இந்த படப்பிடிப்பில் கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூவர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாம்.