Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புர்ஜ் கலிஃபாவில் விக்ரம் படத்தின் ப்ரமோஷன்… ஒவ்வொரு நாடாக பறக்கும் கமல்!

புர்ஜ் கலிஃபாவில் விக்ரம் படத்தின் ப்ரமோஷன்… ஒவ்வொரு நாடாக பறக்கும் கமல்!
, வெள்ளி, 27 மே 2022 (16:21 IST)
விக்ரம் படத்தின் ப்ரமோஷனுக்காக மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பயணம் செய்ய உள்ளார்.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. வரும் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸாகிறது. இந்த படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

நான்காண்டுகளுக்குப் பிறகு கமலின் திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து பல இடங்களுக்கு கமல் ப்ரமோஷன் பணிகளுக்காக செல்கிறார். விரைவில் இந்திய நகரங்களை முடித்துவிட்டு மலேசியா மற்றும் துபாயின் புர்ஜ் கலிஃபா ஆகிய இடங்களில் நடக்கும் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதற்கான அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் தயாரிப்பில் அடுத்து நடிக்க உள்ள இரண்டு ஹீரோக்கள்… வெளியான தகவல்!